தாய்லாந்திலிருந்து தபாலில் வந்த பெரும் ஆபத்தான பொருள் ; அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொதி
தாய்லாந்திலிருந்து அஞ்சல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளை இலங்கைச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
தாய்லாந்திலிருந்து கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்துக்கு வந்திருந்த சந்தேகத்திற்குரிய பொதி ஒன்றைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

போதைப்பொருள் பெறுமதி
இதன்போது, அந்தப் பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோகிராம் எடையுடைய 'குஷ்' ரக போதைப்பொருள் மீட்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் 6 மில்லியன் ரூபாய் என இலங்கைச் சுங்கம் மதிப்பிட்டுள்ளது.
இதனிடையே இந்தப் பொதியை பெற்றுக்கொள்வதற்காக வந்திருந்த தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், போதைப்பொருளுடன் காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகச் சுங்கம் தெரிவித்துள்ளது.