யாழில் செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை ; தொடரும் அதிரடி கைதுகள்
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து ஆனந்தனின் மாமா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடரும் விசாரணை
தொடரும் விசாரணைகளில் இன்னும் சிலர் யாழ்ப்பாணத்தில் கைதாகும் சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கொண்டு சேர்ப்பித்த படகு யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட குறித்த படகு, யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகின் இயந்திரத்தை காணவில்லை என்றும், குறித்த படகை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இஷாரா கிளிநொச்சியில் தலைமறைவாகியிருக்க, உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர் இன்று வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதவான் முன்னிலையில் அவர் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இஷாரா செவ்வந்தியின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருதாக, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.