கொழும்பு கோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல்!
கொழும்பு கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் வருகையால் காரணமாக பல வீதிகள் மூடப்பட்டுள்ளதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, காலி வீதி லோட்டஸ் வீதி, வங்கி மாவத்தை, கொள்ளுப்பிட்டி வரை பிற்பகல் வேளையில் மிகக் குறுகிய மணித்தியாலங்களும், இரவு 9.30 மணிக்குப் பின்னர் காலி வீதி, கோட்டையிலிருந்து கொள்ளுப்பிட்டி, பேஸ்லைன் வீதி தர்மபால மாவத்தை ஊடாக பேஸ்லைன் வீதி, கிரீன்பாத், பொரளை, தெமட்டகொட, ஒருகொடவத்தை நோக்கிய ஹோர்டன் பிளேஸ், ஈரான் ஜனாதிபதியின் பயணத்தின் போது பேலியகொட முதல் கட்டுநாயக்க வரையிலான அதிவேக நெடுஞ்சாலை முற்றாக மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.