பல மாகாணங்களில் கடும் இடியுடன் மழை வாய்ப்பு ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் பல பகுதிகளில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் (Amber) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று (01) நண்பகல் முதல் இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், குருநாகல் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமான பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.