அதிகம் முட்டை சாப்பிடுபவர்களா நீங்கள்? உங்களுக்கான ஒரு எச்சரிக்கை தகவல்
அன்றாட வாழ்க்கையில் முட்டை என்பது நமது உடலுக்கான ஒரு மிகவும் ஆரோக்கியமான உணவாக கருதப்படுகின்றது. பொதுவாக முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. முட்டையில் அதிக புரதம் உள்ளது.
முட்டையை அனைத்து பருவங்களிலும் தினமும் உட்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், முட்டை சாப்பிடுவதும் உடலுக்கு ஆபத்தாகலாம். ஆம்!! ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை 60 சதவிகிதம் அதிகரிக்கும் என்று ஒரு ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியில் பாரிய வெளிப்பாடு : சீனாவின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து ஆய்வில் பங்கேற்ற 8,000 க்கும் அதிகமானோர் மூலம் கிடைத்த தரவுகளில், அதிக முட்டைகளை உண்பவர்களின் உடல் சுறுசுறுப்பு குறைவாக இருப்பதாகவும், சீரம் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அவர்கள் அதிக கொழுப்பு மற்றும் அனிமல் புரோடீனை உட்கொண்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
முட்டை சாப்பிடுபவர்கள் எச்சரிக்கையாக இருங்கள் வேண்டும்:
முட்டையின் மஞ்சள் கருவில் காணப்படும் கோலின் ஆக்சிஜனேற்றம் மற்றும் வீக்கத்தின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள ரசாயனங்களிலிருந்து கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. முட்டை உலகெங்கிலும் உள்ள பல வீடுகளில் காலை உணவின் முக்கிய அம்சமாக உள்ளது. இது புரதத்தின் வளமான மூலமாகவும் உள்ளது.
முட்டையை அதிகம் உண்பதால் ஏற்ப்படகூடிய பொதுவான பிரச்சனைகள்:
- எடை அதிகரிப்பு
- அதிக கொலஸ்ட்ரால் ஆபத்து
- ஃபுட் பாய்சனிங் அபாயம்
-
வயிற்று தொல்லை
முட்டையில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா உள்ளது. இது கோழியில் இருந்து வருகிறது. முட்டைகளை சரியாக வேகவைக்கவில்லை என்றால், இந்த பாக்டீரியாக்கள் உடலில் ஊடுருவி ஆரோக்கியத்தை சேதப்படுத்தும். முட்டைகளை சரியாக சமைக்காத போதும் இதே நிலை ஏற்படும்.
இது வீக்கம், வாந்தி மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிக முட்டைகளை சாப்பிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். புரதத்தின் வளமான ஆதாரமாக இருப்பதால், அதை அதிக அளவில் உட்கொள்வது சிறுநீரகத்தை எதிர்மறையாக பாதிக்கும்.
முட்டைகளை அதிகமாக உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும் : முட்டைகளை தொடர்ந்து உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று பல நிபுணர்கள் நம்புகிறார்கள். ஒரு பெரிய முட்டையில் சுமார் 200 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது, எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
முட்டை உண்பதற்கான சிறந்த வழி : முட்டை சாப்பிட சிறந்த வழி, அவற்றை வேகவைத்து உப்பு, மிளகு மற்றும் கொத்தமல்லி இலைகளுடன் உட்கொள்வதாகும். இல்லையெனில் இரண்டு முட்டைகளைப் பயன்படுத்தி வெஜிடபிள் ஆம்லெட்டும் செய்யலாம்.