நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பணிபகிஷ்கரிப்பு போராட்டம்!
நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 10 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
அதாவது, மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையான 35,000 ரூபாயை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, நாளை (10.01.2024) காலை 8.00 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்தப் பணிப்புறக்கணிப்பு அமுலில் இருக்கும்.
ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்
உரிய கொடுப்பனவை கோரி இன்று (09.01.2024) காலை முதல் மருத்துவ ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு சுகாதார நிபுணர்களுக்கு வழங்கப்படாமைக்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அனைத்து சிறுவர் மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள், சிறுநீரக மருத்துவமனைகள், மத்திய இரத்த வங்கி மற்றும் மனநல நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு தன்னார்வ அடிப்படையில் அனைத்து சேவைகளையும் வழங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும், தேவைக்கேற்ப தன்னார்வ அடிப்படையில் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்க ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.