பெண்களை இழிவுபடுத்தும் அரசியலை எதிர்க்கட்சிகள் நடத்துகின்றன ; நிலந்தி கொட்டாச்சி MP கடும் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக நிலாந்தி கொட்டச்சி mP குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரே அரசியல் கட்சியாக npp யே திகழ்கின்றது.
சில கனவு ஜனாதிபதிகளுக்கு நாட்டின் தற்போதைய பெண் பிரதமர் சவாலாக மாறியுள்ளார்.

இதனால் மிகவும் தரம் குறைந்த இழிவான அரசியல் நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் முன்னெடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அரசியல் ரீதியான முற்போக்குப் பயணம் பின்வாங்கப்படாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்ற விரும்பினால் அற்பமான செயல்களை நிறுத்தி ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் எதிர்க்கட்சிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
பெண்களை இழிவு படுத்தி அரசியல் செய்ய நினைப்பவர்கள் ஒருபோதும் தங்களது இலக்குகளை அடைய மாட்டார்கள்.
எங்களது பெண் தலைவர்களை இழிவு படுத்தி ஓரம் கட்டி விடலாம் என யாரேனும் நினைத்தால் அது வெறும் பகல் கனவு என்பதை தாம் வலியுறுத்த விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.