தமிழர் பகுதியில் உழவியந்திரமும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து
கிளிநொச்சி - பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த உழவியந்திரமும் எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்சம்பவம் நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி அரி கல் ஏற்றிய நிலையில் சென்று கொண்டிருந்த உழவியந்திரமும், எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.
உழவியந்திரத்துடன் மோதிய டிப்பர் வீதியில் குறுக்காக தடம் புரண்டுள்ளது.
உழவியந்திரத்தில் பயணித்த பெண் உட்பட மூன்று பேர் காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிப்பர் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார். விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.