ஜி.பி முத்துக்கு பதில் இவரா? இவர் போடும் கண்டிஷன்ஸ்
பிக்பாஸ் சீசன் 06 நிகழ்வானது நாளுக்கு நாள் மிகவும் சுவாரசியங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்று வருகின்றது.
இதேவேளை இம்முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் தெரிவில் பிக்பாஸ் குழுவினர் மிகவும் உன்னிப்பாகவும் பிக்பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் விதமாகவும் அனைத்துப் போட்டியாளர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் பிக்பாஸ் ஆறாம் சீசன் தற்போது மூன்றாம் வாரத்தை நிறைவு செய்ய இருக்கின்றது.
மேலும் இரண்டாம் வாரத்தில் முக்கிய போட்டியாளராக இருந்த ஜி.பி முத்து தன் குடும்பத்தை பார்க்க வேண்டும் என சொல்லி வெளியில் சென்றுவிட்டார்.
இவருக்கு பதிலாக மன்சூர் அலிகானை கொண்டு வர விஜய் டிவி முயற்சித்து வருகிறது என தகவல் பரவி வருகிறது.
‘பிக்பாஸில் கூத்தடிப்பது பிடிக்கல. நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டேன். அப்படி செல்வதாக இருந்தால் அங்கு நான் தான் பிக்பாஸாக இருப்பேன்’ என மன்சூர் தெரிவித்துள்ளமை விசேட அம்சமாகும்.