ஹட்டன் விபத்து ; சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு
விபத்துக்குள்ளார் ஹட்டன் தனியார் பஸ் விபத்து சாரதியின் விளக்கமறியல் மேலும் நீடிக்கபப்ட்டுள்ளது.
இந்நிலையில் விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று (26) மீண்டும் முன்னிலைப்படுத்திய போது, சாரதியை 01.07.2025 வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவான் உத்தரவிட்டார்.
அடுத்த மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியல்
விபத்து தொடர்பில் நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகனப் பரிசோதகரும் ஹட்டன் பொலிஸாரும் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து சந்தேக நபர்களை அடுத்த மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானிடம் கோரினர்.
ஹட்டன் பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான் சந்தேக நபரின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.
நாவலப்பிட்டி, நவ திஸ்பனையில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய பிரஷாசன்ன பண்டார என்பவரின் விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி கடந்த 21ஆம் திகதி பயணித்த தனியார் பேருந்து, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் மூவர் மரணமடைந்தனர். மேலும் விபத்தில் 51 பேர் காயமடைந்து, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் எட்டுப்பேர், கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.