யாழில் பிரபல பாடசாலை மாணவி போதைப்பொருளுக்கு அடிமையா? வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்
யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 19 வயதான இளம் பெண் ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும், அவரை உரிய முறையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தாது குடும்பத்தினர் பாதுகாத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.
குறித்த இளம் பெண் பல்வேறு இளைஞர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் அறைகளை வாடகைக்கு எடுத்து போதைப்பொருள் பாவிப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் இளம் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் வயது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், விடுதி ஊழியர்கள் நிர்வாகத்தினருக்கு தகவல் வழங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டு பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த இளம் பெண் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல்கள் வழங்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சில தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குடும்பத்தின் செல்வாக்கு காரணமாக குறித்த விவகாரம் வெளியில் வராமல் தடுக்கப்படுவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
எனவே, சம்பவம் தொடர்பில் பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விசாரணை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்த பின்னரே குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும்.
இதேவேளை, இளம் தலைமுறையினரிடையே போதைப்பொருள் பாவனை தொடர்பான ஆபத்துகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் பெற்றோர் மற்றும் பொறுப்பான தரப்பினர் உரிய முறையில் தலையிட்டு தேவையான மருத்துவ மற்றும் புனர்வாழ்வு உதவிகளை வழங்குவது முக்கியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.