மனைவி மற்றும் மாமியார் தொல்லை; கருணைக்கொலை செய்யக்கோரும் கணவன்
இந்தியாவில், தன் மனைவி மற்றும் மாமியாரின் கொடுமைகளை தாங்க முடியாத நபர் ஒருவர், மாவட்ட கலெக்டரிடம் தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக்கோரி மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த துணி வியாபாரியான குறித்த நபர் , அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை நான்காவதாக திருமணம் செய்தார். அவரது மனைவி, சிறிய விஷயங்களுக்குக் கூட சந்தேகம் அடைந்து சண்டையிட்டு வந்துள்ளார்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும் இதே நிலை...
திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும் இதே நிலை நீடித்ததால், குறித்த நபர் , கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினார். இந்நிலையில் சூரத் மாவட்ட கலெக்டரிடம், கிரித் படேல் சமீபத்தில் அளித்த கோரிக்கை மனுவில் ,
மனைவி, மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் என் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, உடல் மற்றும் மன ரீதியாக தொல்லை கொடுத்து வருகின்றனர். , இந்த கொடுமைகளை பல ஆண்டுகள் சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்தேன்.
தற்போது எல்லை மீறியதால், வேறு வழியின்றி உயிரை போக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன். எனவே, கருணை கொலை தொடர்பான என் மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும்.
மூன்று நாட்களுக்குள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், விபரீத முடிவு எடுக்க நேரிடும் என கூறியுள்ளார். அத்துடன் என் முதல் மனைவிக்கு பிறந்த மகனை, நான்காவது மனைவி மனிஷா சவுகான் கொலை செய்ய திட்டமிட்டார்.
எனவும் ‘இதுதொடர்பாக, பொலிஸாரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தான் ஒரு ஆண் என்பதால், என் மனுவை பரிசீலிக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளதாகௌம் கூறப்படுகின்றது.