நீதி அமைச்சருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்
தற்போது பதவியில் உள்ள நீதியரசர்களின் பதவிக்காலத்தை மாத்திரம் நீடிக்கும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், நீதித்துறையின் சுயாதீனத்தின் மீது, பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைந்து போகும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.
அதேநேரம், உயர்நீதித்துறையைப் பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தங்கள் அவசர அடிப்படையில் அல்லாது, வெளிப்படையான பொதுக் காரணங்களுடனும், அனைத்து பங்குதாரர்களுடனும் ஆலோசனைகளுடனே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவுக்கு நீதித்துறை உறுப்பினர்கள், முன்னாள் நீதிபதிகள், சிரேஷ்ட சட்டத்தரணிகள், கல்வியாளர்கள் மற்றும் சர்வதேச சட்ட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பாக நீதி அமைச்சருடன் சந்திப்பு ஒன்றையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.