மக்களுக்கு லிட்ரோ விடுத்த மகிழ்ச்சியான தகவல்!
திங்கட்கிழமை முதல் சமையல் எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் அதுவரை எரிவாயு விநியோகம் இருக்காது என்றும் லிட்ரோ கூறியுள்ளது.
இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு கியூவில் நிற்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த அவர், அடுத்த வாரம் முதல் விநியோகம் தொடங்கும் என்று உறுதியளித்தார்.
அதேவேளை 3500 மெட்ரிக் டன் எரிவாயு நேற்று இலங்கைக்கு வரவிருந்த நிலையில், கப்பலுக்கு எரிபொருள் நிரப்புவதற்குத் தேவையான வசதிகளை இலங்கையால் வழங்க முடியாததால், இந்தியாவுக்குச் சென்றது.
இதனால், எரிவாயு விநியோகம் இன்னும் இரண்டு நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ கேஸ் லங்கா அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் அடுத்த வாரத்தின் நடுப்பகுதியில் தொடங்கும் என லிட்ரோ நிறுவனம் இப்போது அறிவித்துள்ளது