ஹேக் செய்யப்பட்ட இசையமைப்பாளர் டி இமானின் எக்ஸ் தளம்
இசையமைப்பாளர் டி இமானின் எக்ஸ் தளம் ஊடுருவப்பட்டுள்ளதாக இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருந்த பதிவில், "எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் ஊடுருவப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊடுருவிகள் எனது கணக்கு தொடர்புடைய மின்னஞ்சலையும் மாற்றி இருக்கின்றார்கள். மேலும் கடந்த 24 மணி நேரத்திற்குள் எனது எக்ஸ் பக்கத்தில் பதிவுகளையும் பதிவிட்டிருக்கிறார்.
எனது கணக்கை விரைவில் மீட்டுத் தருமாறு எக்ஸ் தள நிர்வாகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் இருப்பதால், என்னைப் பின்தொடர்பவர்களுடனான தொடர்பு எனக்கு மிகவும் முக்கியமானது.
தற்போது என்னுடைய எக்ஸ் பக்கத்திலிருந்து எதாவது பதிவுகள் வந்தால் அதனை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். எக்ஸ் நிர்வாகம் உடனடியாக என்னுடைய கணக்கை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில் உங்களின் ஆதரவுக்கு நன்றி. எனது கணக்கைத் திரும்பப் பெற்றவுடன் உங்களுக்குத் தகவலைத் தெரிவிக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.