விமானத்தில் நிர்வாணமாக ஓடிய பெண்ணால் திகைப்பில் பயணிகள்
அமெரிக்க விமானத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கத்திக் கொண்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த 3ஆம் திகதி டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள வில்லியம் பி. ஹாபி விமான நிலையத்திலிருந்து அரிசோனாவின் பீனிக்ஸ் நோக்கிச் சென்ற சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில்தான் நிகழ்ந்துள்ளது.
மனநல சிகிச்சை
குழந்தைகள் உட்பட மற்ற பயணிகள் முன்னிலையில் பெண் ஆடைகளை அவிழ்த்துவிட்டபடி, கத்திக் கொண்டு ஓடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாது நிர்வாணமாக கத்தியபடியே விமானியின் அறைக் கதவைத் தட்டியதாகவும், அதற்கு முன்பு விமானப் பணிப்பெண்களைக்கூட அவர் திட்டியதாகவும், விமானத்தில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், ஹூஸ்டனின் ஹாபி விமான நிலையத்தில், அந்தப் பெண் போர்வையால் மூடி அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், மனநல சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை தன்னையே மறந்து அவர் இப்படி நடந்து கொண்டமை பயணிக்களை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது.