முன்னாள் இராணுவ வீரரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள்
பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ வீரர் ஒருவரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொட்டுகொட புனித கைதானு மாவத்தையில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் உள்ள குழியிலிருந்து ரிபீட்டர் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தடுப்பு காவல்
கொட்டுகொட பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி 14 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 37 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கொட்டுகொட புனித கைதானு மாவத்தையில் உள்ள அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள குழியிலிருந்து ரிபீட்டர் ரக துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் சட்டப்பூர்வமாக இராணுவ சேவையை விட்டு விலகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.