இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

Anura Kumara Dissanayaka Economy of Sri Lanka Dollars NPP Government
By Sulokshi Sep 15, 2026 03:00 PM GMT
Report

  2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தேசிய கணக்கு மதிப்பீடுகளின்படி, ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் இந்த பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி | Sri Lanka S Economy Grows By 4 2 Percent

  முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், அதற்கமைய இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.2 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது.

இரண்டாம் காலாண்டில் கைத்தொழில் துறை 7.3 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ள அதேவேளை, சேவைத் துறை 2.7 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது. எப்படியிருப்பினும், விவசாயத் துறையில் 2.3 சதவீத பின்னடைவு பதிவாகியுள்ளது.

கணவனை கைவிட்டு காதலியுடன் ஓட்டமெடுத்த மனைவி; ஷாக்கில் உறவினர்கள்!

கணவனை கைவிட்டு காதலியுடன் ஓட்டமெடுத்த மனைவி; ஷாக்கில் உறவினர்கள்!

கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு சுரங்க மற்றும் அகழ்வாராய்ச்சி தொழில், கட்டுமானத் துறை மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி விநியோகத் துறைகளின் வளர்ச்சி முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

சேவைத் துறையில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் 10 சதவீதமும், காப்பீட்டு சேவைகள் 8 சதவீதமும் மற்றும் நிதிச் சேவைகள் 7.7 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன.

இதனிடையே, விவசாயத் துறையின் பின்னடைவுக்கு நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் நெல் சாகுபடி குறைவடைந்தமையே முக்கிய காரணம் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கிறது.

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026 இரண்டாம் காலாண்டில் தற்போதைய சந்தை விலைகளின் கீழ் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8,254,176 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், இது 11.3 சதவீத வளர்ச்சியாகும்.

மத்திய கிழக்கு நெருக்கடி நிலை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக சுற்றுலாத் துறையில் சற்று மந்தநிலை காணப்பட்ட போதிலும், இறக்குமதி அளவுகளின் வளர்ச்சி காரணமாக உள்நாட்டு உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை மற்றும் கட்டுமானத் துறையின் விரிவாக்கம் என்பன பொருளாதார வளர்ச்சிக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US