பேய் பிடித்ததாக கூறி மாணவியை தோழிகள் செய்த சம்பவம் ; விசாரணையில் காத்திருந்த ஷாக்
மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்தும் கொடுமைப்படுத்திய தோழிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பொறியியல் கல்லூரியில் மாணவி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை 2 மாணவிகள், பேய் பிடித்ததாக கூறி, அவருடன் தங்கியிருந்த தோழிகளான 4 பேரும் அந்த மாணவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளனர்.

பொலிஸார் விசாரணை
மேலும் துடைப்பத்தால் அந்த மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்.
தோழிகளின் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி, சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் சக மாணவிகள் 4 பேர் மீதும் சின்னசேலம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.