கணவனை கைவிட்டு காதலியுடன் ஓட்டமெடுத்த மனைவி; ஷாக்கில் உறவினர்கள்!
இந்தியாவில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவை கைவிட்டு நண்பியுடன் வாழ அடம்பிடிப்பதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உத்தரப் பிரதேச மாநிலம், காஸியாபாத் மாவட்டம் கோடா பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மாயமான பெண்
மனைவியைக் காணாமல் தவித்து வந்த கணவர், அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு இறுதியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காணாமல் போன பெண்ணைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், ஒரு மாதப் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
ஆனால், காவல்துறையினர் விசாரணையில் கண்டறிந்த உண்மை அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெண் கடத்தப்படவோ அல்லது வேறு எந்த ஆபத்திலும் சிக்கவோ இல்லை.
மாறாக, தனது நெருங்கிய பெண் தோழியுடன் சென்று அவருடன் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.
காவல் நிலையத்திற்கு இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, அந்தப் பெண் தனது கணவருடன் மீண்டும் வாழ முடியாது என்றும், தனது பெண் தோழியுடன்தான் சேர்ந்து வாழ்வேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து அடம்பிடித்துள்ளார்.
குடும்பத்தினரும் காவல்துறையினரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், இரு பெண்களும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முற்றிலும் மறுத்துவிட்டனர்.
இளம் வயதிலேயே திருமணமான பெண்ணின் இந்த அதிரடி முடிவு, கணவர் மற்றும் இரு வீட்டாரையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
சட்டபூர்வமாகப் பெரியவர்களுடன் பேசித் தீர்வு காணக் காவல்துறையினர் முயன்றபோதும், இரு பெண்களும் தங்கள் முடிவில் உறுதியாக நிற்பதாக கூறப்படுகின்றது .
உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறிய இந்த விசித்திர காதல் மற்றும் நட்புப் பின்னணி விவகாரம், தற்போது சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.