“புதிய பொதுமன்னிப்பு வழங்குங்கள்” ; அநுரவிடம் ஞானசார தேரர் வேண்டுகோள்

Anura Kumara Dissanayaka Sri Lanka Galagoda Aththe Gnanasara Thero High Court of Sri Lanka
By Sahana Sep 21, 2026 11:56 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தனக்கு புதிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குமாறு தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்குமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மூத்த பௌத்த பிக்குகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனோஜனை காப்பாற்ற இரண்டே வழிகள் ; அநுரவின் கைகளில் இறுதி முடிவு

அனோஜனை காப்பாற்ற இரண்டே வழிகள் ; அநுரவின் கைகளில் இறுதி முடிவு

கொழும்பில் உள்ள சம்புத்தத்வ ஜயந்தி மந்திரயாவில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற தனது ‘நவயா பஹ விகுர்திய’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தனது எதிர்காலம் தொடர்பில் தற்போது நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஞானசார தேரர், அதேவேளை நாட்டின் சட்டத்தை மதிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“புதிய பொதுமன்னிப்பு வழங்குங்கள்” ; அநுரவிடம் ஞானசார தேரர் வேண்டுகோள் | Gran General Amnesty Gnanasara Thero Request Anura

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தாம் அச்சமடையவில்லை எனவும், தனது விதி எவ்வாறு அமையப்போகிறது என்பது தெரியாது என்றாலும் சட்டத்திற்கு தலைவணங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நடைமுறையில் அதிகாரிகளால் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால், அதற்கான விளைவுகளைத் தான் ஏன் எதிர்கொள்ள வேண்டும் எனவும் ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியினால் பின்பற்றப்பட்ட நடைமுறையில் ஏற்பட்டிருக்கக்கூடிய தவறுகளை தற்போதைய ஜனாதிபதியால் திருத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மத நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், தமக்காக ஜனாதிபதி பொதுமன்னிப்பை கோரி மூத்த பௌத்த பிக்குகள் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, தனது 87 வயதுடைய தாயார் குறித்தும் உணர்வுபூர்வமாக பேசிய ஞானசார தேரர், தான் சிறையில் அடைக்கப்பட்டால் அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்ற கவலையையும் வெளியிட்டுள்ளார்.

தான் எந்தவொரு அரசியல்வாதியின் ஆதரவாளராகவும் செயற்படவில்லை எனத் தெரிவித்த அவர், தாம் புத்தரின் போதனைகளைப் பின்பற்றுபவர்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும், தனக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவை அல்ல எனவும், முன்னாள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே அவை ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல ஆண்டுகளாக தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஞானசார தேரர், தன்னால் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டரீதியாக செல்லுபடியாகாது என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி தீர்ப்பளித்தது.

“புதிய பொதுமன்னிப்பு வழங்குங்கள்” ; அநுரவிடம் ஞானசார தேரர் வேண்டுகோள் | Gran General Amnesty Gnanasara Thero Request Anura

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய நடைமுறை தன்னிச்சையானதாகவும் சட்டரீதியாக செல்லுபடியாகாததாகவும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன் பின்னர், ஞானசார தேரர் மீதமுள்ள சிறைத்தண்டனையை அனுபவிப்பது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தப் பின்னணியிலேயே, புதிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை கோரும் ஞானசார தேரரின் வேண்டுகோள் தற்போது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

கனடாவில் இருந்து யாழ் வந்த வயோதிப பெண் வீட்டில் சடலமாக மீட்பு ; உடற்கூற்றில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

கனடாவில் இருந்து யாழ் வந்த வயோதிப பெண் வீட்டில் சடலமாக மீட்பு ; உடற்கூற்றில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US