கனடாவில் இருந்து யாழ் வந்த வயோதிப பெண் வீட்டில் சடலமாக மீட்பு ; உடற்கூற்றில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

Sri Lanka Police Jaffna Jaffna Teaching Hospital Canada
By Sahana Sep 22, 2026 01:00 AM GMT
Report

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் 74 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனோஜனை காப்பாற்ற இரண்டே வழிகள் ; அநுரவின் கைகளில் இறுதி முடிவு

அனோஜனை காப்பாற்ற இரண்டே வழிகள் ; அநுரவின் கைகளில் இறுதி முடிவு

முத்துவேலு விஜயலட்சுமி என்ற 74 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த குறித்த பெண், தனது மகனுடன் அராலி மத்தி பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனடாவில் இருந்து யாழ் வந்த வயோதிப பெண் வீட்டில் சடலமாக மீட்பு ; உடற்கூற்றில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் | Woman Who Arrived In Jaffna From Canada Found Dead

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த பெண் வீட்டில் சடலமாகக் காணப்படுவதாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, சடலத்தில் பல்வேறு அடிகாயங்கள் காணப்பட்டதுடன், வீட்டுக்குள் இருந்த பொருட்கள் பல இடங்களில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, மல்லாகம் நீதிமன்ற நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையின்போது பெண்ணின் உடலில் கைகளாலும், வயர்களாலும், பொல்லுகளாலும் தாக்கப்பட்டதற்கான காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் அடிப்படையில் குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணை

குறித்த வீட்டில் உயிரிழந்த பெண்ணும் அவரது மகனும் மட்டுமே வசித்து வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கனடாவில் இருந்து யாழ் வந்த வயோதிப பெண் வீட்டில் சடலமாக மீட்பு ; உடற்கூற்றில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் | Woman Who Arrived In Jaffna From Canada Found Dead

இதனையடுத்து, கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மகனை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நபர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வீதியில் பல இலட்சம் ரூபாய் பணத்தை வீசியதுடன், மேலும் பல இலட்சம் ரூபாய் பணத்தை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த முந்தைய சம்பவத்துக்கும் தற்போதைய கொலைச் சம்பவத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

24 மணிநேரத்தில் மேலும் வலுப்பெறவுள்ள வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் ; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

24 மணிநேரத்தில் மேலும் வலுப்பெறவுள்ள வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் ; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US