பதவியேற்க அழைக்காத ஆளுநர்; , உச்ச நீதிமன்றத்தை நாடும் தவெக!
சட்டமன்ற தேர்தலில் விஜய் தலமையிலான தவெக கடிசி அமோக வெற்றி பெற்றும் தமிழ்நாடு ஆளுநர் தவெகவை ஆட்சியமைக்க இன்னும் அழைப்பு விடுக்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் முறையிட தமிழக வெற்றிக் கழகம் முடிவெடுத்துள்ளது.
தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், இதுவரை விஜய்யை ஆட்சி அமைக்க ஆளநர் அழைக்காததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்க தவெக அவகாசம்
அமைச்சரவை பதவியேற்ற பிறகு, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெக அவகாசம் கோரிய நிலையில், தற்போதே பெரும்பான்மைக்கு தேவையான 118 உறுப்பினர்களின் பட்டியலை வழங்க ஆளுநர் அறிவுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட தவெக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ். ஆர். பொம்மை தொடர்ந்த வழக்கில், மக்களின் ஆதரவு மற்றும் பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்தால் போதும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன்னுதாரணமாக வைக்க தவெக திட்டமிட்டுள்ளது.