இரசாயன உரம் தொடர்பில் வெளியான அரசாங்கத்தின் நிலைப்பாடு
நெல் மற்றும் மரக்கறி உள்ளிட்ட பெறுபோக பயிர்களுக்கான இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு தற்போது வரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது,
“இரசாயனப் பசளை இறக்குமதியை தடை செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. சேதனப்பசளை பயன்பாட்டுக்கு தேவையான அனைத்து முன்னெடுப்புகளும் தொடர்ந்து இடம்பெறுவதாக தெரிவித்தார்.
இரசாயனப் பசளை இறக்குமதியை அரசாங்கம் அண்மையில் நிறுத்தியதோடு சேதனப்பசளை பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. தற்போது அரசாங்க நானோ நைட்ரஜன் திரவ உரத்தை வழங்கி வருகிறது.
இருப்பினும் இரசாயனப் பசளை இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு சில தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்த பொது அரசாங்கம் எந்த மாற்றத்தையும் தனது முடிவில் கொண்டு வரவில்லை.