நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தும் அரசின் நகர்வு ; நாமல் கடும் குற்றச்சாட்டு

Cancer United Nations Namal Rajapaksa Sri Lanka
By Sahana Aug 21, 2026 12:07 AM GMT
Report

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவு, நீதித்துறை மீதான செல்வாக்கை அதிகரிப்பதற்கும், தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான முயற்சியாக இருக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அரசாங்கம் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், நீதிமன்ற நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்துவதற்குமே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவர முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தும் அரசின் நகர்வு ; நாமல் கடும் குற்றச்சாட்டு | Government S Move To Raise Retirement Age Judges

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), ஐக்கிய நாடுகள் சபை மற்றும் காமன்வெல்த் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பான அபராதங்களை அதிகரிப்பதில் தமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, இது தொடர்பாக இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த முழுமையான விபரங்களை வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்தார்.

18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை நிலவுவதாகவும், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டமைக்கும் நாமல் ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறும் அவர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்த 18 வயது இளைஞர் ; அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்த 18 வயது இளைஞர் ; அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

யாழ். இணுவிலில் மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!

யாழ். இணுவிலில் மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US