நாளை பணிப்பகிஷ்கரிப்பிற்கு தயாராகும் அரச தாதியர் சங்கம்
நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மூன்று மணித்தியால பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
பதவியுயர்வு வழங்கப்படாமை மற்றும் சம்பள குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
அரச தாதியர் சங்கம் நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை 3 மணி நேரத்திற்கு தமது சேவையிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நோயாளர்களைப் பணயம் வைத்து, நோயாளிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில், சுகாதார சேவையை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் யாரேனும் செயற்பட்டால் மக்களின் பக்கம் இருந்து அதற்கான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும், இந்த நோக்கத்திற்காகத் தயங்காமல் நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.