வெலிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டாம்
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை கொழும்பு குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஆறு சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டாம் என்று சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான பின்னர் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக, பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது.