அரச நிறைவேற்று அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்
Government Employee
Protest
Budget 2027
By Sahana
2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஏற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று (20) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அரச நிறைவேற்று அதிகாரிகள் கூட்டுக் குழு இதனைத் தெரிவித்துள்ளது.

பல்வேறு நிறைவேற்றுச் சேவைப் பிரிவுகளைச் சேர்ந்த 20 தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதீட்டுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள கொடுப்பனவு அதிகரிப்புகள், தமது சம்பளம் மற்றும் சலுகைகள் தொடர்பான கோரிக்கைகளுக்குத் தீர்வளிக்கவில்லை என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US