துறைமுக நெரிசலை கட்டுப்படுத்த அரசு அதிரடி முடிவு
நடப்பாண்டின் பிற்பகுதியில் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி கொள்கலன்களின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால், துறைமுகத்தின் செயல்பாடுகள் மற்றும் அனுமதி நடவடிக்கைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது, சுமார் 8,000 கொள்கலன்கள் அனுமதி நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறைந்த ஆபத்துள்ள கொள்கலன்களை துறைமுக அதிகாரசபையால் புளுமெண்டலில் அமைந்துள்ள பிரிவுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுங்கத் துறையின் முழு மேற்பார்வையின் கீழ் அனுமதி நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதன் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய மற்றொரு கலந்துரையாடலை நடத்துவதற்கும் அமைச்சர் அநுர கருணாதிலக்க பணிப்புரை விடுத்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.