மக்களிடம் உண்மையை மறைத்த கோட்டா அரசாங்கம்!
இலங்கையின் முன்னைய அரசாங்கம் நிதி நெருக்கடி பற்றிய உண்மைகளை மூடிமறைத்ததாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். செய்திச்சேவை ஒன்றிற்கு அளித்த செவ்வியில் பதில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் உண்மையைச் சொல்லவில்லை. இலங்கைக்கு ஐந்து வருடங்கள் அல்லது 10 வருடங்கள் தேவையில்லை.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஸ்திரத்தன்மையை அடையும் நகர்வு ஆரம்பமாகும். நிச்சயமாக 2024க்குள் செயல்படும் பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பிக்கும் எனவும் ரணி விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற முன்னாள் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து பின்னர் சிங்கப்பூர் சென்றதில் இருந்து தம்முடன் உரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் அவர், இன்னும் சிங்கப்பூரில் இருக்கிறாரா அல்லது வேறு எங்காவது இருக்கிறாரா என்பது தனக்குத் தெரியாது எனவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது மேலும் தெரிவித்தார்.