இலங்கை மக்களுக்கு க்ஷாக் கொடுக்கும் தங்கம் விலை; வரலாறு காணாதளவு உயர்வு!
நாட்டில் இன்று (23) ஒரு பவுண் தங்கத்தின் விலை 1800 ரூபாவால் உயர்ந்துள்ளமை நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி ,வரலாறு காணாத உச்சத்தை தங்கம் விலை தொட்டுள்ளது.
தங்கத்தின் விலை
இலங்கையில் நேற்றைய தினம் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 277,500 ரூபாயாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 300,000 ரூபாயாகவும் காணப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 279,300 ரூபாயாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 302,000 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய இன்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
அதேவேளை இந்த மாத ஆரம்பத்தில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 257,200 ரூபாயாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 278, ரூபாயாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.