பாபா வாங்கா கணிப்பு படி தங்க விலை உயருமா? 2026-ல் வரப்போகும் பேரழிவுகள்
ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் எதிர்காலத்தைப் பற்றி அறிய விரும்பும் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பாபா வாங்காவின் கணிப்புகளைப் பற்றி தேடுகிறார்கள். பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான தீர்க்கதரிசனம் குறித்த பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, 2026 ஆம் ஆண்டு ஒரு ஆபத்தான ஆண்டாக இருக்கும். உலகப் போர், பேரழிவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் போன்ற கடுமையான பிரச்சினைகள் இந்த ஆண்டு உலகை அச்சறுத்தலாம். 2026-ல் உலகம் எதிர்கொள்ள போகும் அச்சுறுத்தல்கள் என்னென்ன என நாம் இங்கு பார்ப்போம்.

உலகப்போர்
பாபா வங்கா 2026-ல் சர்வதேச பதட்டங்கள் அதிகரிக்கும் என்று கணித்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு பெரிய மோதல் ஏற்படலாம். 2026-ன் தொடக்கத்திலேயே அமெரிக்கா வெனிசுலா மீது தாக்குதல் நடத்தியிருப்பது இந்த கணிப்பை உறுதி செய்கிறது. முக்கிய நாடுகளுக்கு இடையேயான மோதல்களால் உலக அமைதி பாதிக்கப்படலாம்.

ரஷ்ய தலைவரின் உலகளாவிய எழுச்சி
2026-ஆம் ஆண்டில் ரஷ்யாவை சேர்ந்த ஒரு வலிமையான தலைவர் உலகெங்கிலும் அறியப்படுவார் என்று பாபா வங்கா கணித்துள்ளார். சர்வதேச அரசியலில் ரஷ்யா மேலும் சக்திவாய்ந்த நாடாக மாறக்கூடும். அந்த ரஷ்ய தலைவர் சர்வதேச மோதல்கள் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்கு வகிப்பார் என்று கூறப்படுகிறது.
இயற்கை பேரழிவுகள் அதிகரிக்கும்
வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் அதிகரிக்கக்கூடும். உலகின் சில நாடுகளில், காலநிலை சமநிலையின்மை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக தாழ்வான மற்றும் கடலோரப் பகுதிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடும்.

ஏலியன்களுடனான தொடர்பு
பாபா வாங்காவின் சில கணிப்புகள் வேற்றுக்கிரக உயிரினங்களுடனான முதல் தொடர்பைப் பற்றி விளக்குகின்றன. அதிநவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேற்றுக்கிரக சிக்னல்களைக் கண்டறிய உதவக்கூடும். மேலும் இரகசிய விண்வெளித் திட்டங்கள் குறித்த தகவல்கள் அரசாங்கங்களால் வெளியிடப்படலாம்.
மருத்துவத்துறையில் திருப்புமுனை
மனிதர்களை அச்சுறுத்தும் சில கடுமையான நோய்களுக்குப் புதிய சிகிச்சைகள் கண்டறியப்படலாம். தொழில்நுட்பத்தால் மருத்துவத்துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படலாம். இந்த புதிய தொழிநுட்பங்களால் மனிதர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும்.
