நகைப்பிரியர்களுக்கு க்ஷாக் கொடுத்த தங்கம் விலை
தங்கம் விலை டிசம்பர் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் நகை வாங்க காத்திருந்தோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அந்தவகையில் சென்னையில் நேற்று கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ஆம் திகதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரம்
அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று டிசம்பர் 26ஆம் திகதி கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,895க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,829க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,632க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.