வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சென்னையில் குறைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தில் விலை 2025 ஆண் ஆண்டு பிறந்தது முதலே அதிகரித்து சென்ற வரலாறு காணாத உச்சம் தொட்டது.
இன்று தங்கம் விலை நிலவரம்
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (மே 24) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,990க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,920க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
இன்று (மே 26) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,950க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.7345க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ. 58.760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமேதுமின்றி,, ஒரு கிராம் வெள்ளி ரூ. 111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.