326 பயணிகளுடன் தரையிறங்க வந்த விமானம் ; லேசர் லைட்டால் பரபரப்பு!
டுபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க முயன்றபோது, சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானம் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துபாயிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், 326 பயணிகள் உடன், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தது.
திடீரென பாச்சப்பட்ட வெளிச்சத்தால் திக்குமுக்காடிய விமானி
சென்னையில் விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக, விமானம் பறக்கும் உயரத்தை படிப்படியாக குறைத்து, தாழ்வாக பறந்து கொண்டு இருந்தது அப்போது சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து, பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளி, விமானத்தின் மீது பீச்சி அடிக்கப்பட்டது.
இதனால் விமானி சற்று நிலை குலைந்தாலும், அடுத்த சில வினாடிகளில் தன்னை சுதாகரித்துக் கொண்டு, தாழ்வாக பறந்து கொண்டு இருந்த, விமானத்தை மேலும் உயரத்தில் பறக்கச் செய்தார்.
அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசரமாக தகவல் தெரிவித்து, விமானம் தரையிறங்கும் போது, அதற்கு இடையூறு செய்வது போல், லேசர் லைட் ஒளி, விமானத்தின் மீது பீச்சி அடிக்கப்படுகிறது என்று புகார் செய்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விமான பாதுகாப்பு பிரிவான ஃபீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி மற்றும் சென்னை விமான நிலைய போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
சில வினாடிகளில் அந்த ஒளி நின்று விட்ட பின்னர் விமாஅனி விமானத்தை பத்திரமாக தையிறக்கியதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
அதேவேளை 2 ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பகின்றது. இந் நிலையில் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.