இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!
கடந்த ஒரு வாரமாக மாற்றமின்றி காணப்பட்ட தங்கத்தின் விலையில் நேற்று முதல் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (19) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3,000 ரூபாயால் அதிகரித்த நிலையில், இன்று (20) விலையில் மாற்றமின்றி அதே நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், இன்று (20) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.