யாழில் இருவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை
கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ் . மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் ,இன்றைய தினம் (20) வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.
தீர்ப்புக்காக வழக்கு மன்றில் நீதிபதி டி.எஸ் சூசைதாஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிரிகளான இருவரையும் மன்று நியாமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்றவாளிக்காக கண்டு இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் நிர்ணயிக்கப்படும் இடத்தில் குற்றவாளியின் உயிர் பிரியும்வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கிறது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.