வெளிநாட்டு பெண்ணிடம் சேட்டை; அத்துமீறிய வைத்தியருக்கு சிக்கல்
காலி பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சேட்டை புரிந்ததாக கூறப்படும் வைத்தியசாலை கதிரியக்க நிபுணர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு பெண் ஒருவர் காலி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரிசோதனை செய்வதாக கூறி பாலியல் சேட்டை
குறித்த கதிரியக்க நிபுணர் அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற ஒரு வைத்தியர் எனத் தெரியவந்துள்ளது. வெளிநாட்டு பெண் விலா எலும்பில் ஏற்பட்ட வலி காரணமாக காலி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சென்றுள்ளார்.
இதனபோது அங்கிருந்த கதிரியக்க நிபுணர் ஒருவர் பரிசோதனை செய்வதாக கூறி வெளிநாட்டு பெண்ணின் தனிப்பட்ட உறுப்புகளைத் தொட்டு பாலியல் சேட்டை புரிந்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பெண்ணின் முறைப்பாடு தொடர்பில் காலி பொலிஸாரால் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.