மலேசியாவிலிருந்து குஷ் உடன் இறங்கிய இலங்கையர்; ஆடிப்போன அதிகாரிகள்
10 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று (20) அதிகாலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மலேசியாவிலிருந்து குஷ் போதைப்பொருளை வாங்கி, அங்கிருந்து சிங்கப்பூருக்கு விமானம் மூலம் அனுப்பி, அங்கிருந்து இன்றுஅதிகாலை 12.45 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
சந்தேக நபரின் 03 பயணப் பொதிகளில் சுமார் 01 கிலோகிராம் 24 கிராம் போதைப்பொருள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு - மருதானை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.