ஆடி செவ்வாய் கிழமையில் மகத்துவம் வாய்ந்த அம்மன் வழிபாடு; பெண்களே மறக்காது கடைப்பிடியுங்கள்!
ஆடிமாதம் அம்மனுக்கு உரிய சிறப்பு வாந்த மாதமாகும் . ஆடி செவ்வாய்யில் அம்மனை தேடிச் சென்று வணங்கினால், துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓடி விடும் என்பது நம்பிக்கை .
ஆடி செவ்வாய், ஆடி வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் அம்மனை வழிபட்டு வர பல வரங்களை அருளுவாள் அந்த ஆதிபராசக்தி.
ஆடி செவ்வாய் வழிபாடு
அந்த வகையில் இந்த ஆண்டு இந்த ஆண்டு ஆடி மாதத்தில் நான்கு செவ்வாய்கிழமைகள் உள்ளன. ஜூலை( 23) அதாவது இன்று ஆடி முதல் செவ்வாய்கிழமை வழிபாடு கடன் பிரச்சனையை தீர்க்கக் கூடியதாகும்.
ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து மஞ்சள் பூசிக் குளித்து விரதம் அனுஷ்டித்து அம்மனயும் முருகனையும் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும்.
மாங்கல்யத் தடை நீங்கும்
அதுமட்டுமல்லாது தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் செய்யப்படும் வழிபாடுகளும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதாகும்.
ஆடி முதல் செவ்வாய்கிழமையில் கடன் விரைவில் அடைவதற்கும், செல்வம் சேருவதற்கும் மகாசக்திக்குள் அடங்கி இருக்கும் மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு
ஆடி முதல் செவ்வாய் அன்று கனகதாரா ஸ்தோத்திரம் படித்து அம்மனை வழிபடுவது மிகவும் விசேஷம்.
மேலும் ஆடி செவ்வாய்கிழமையில் துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் நீங்கி விடும்.