அநுரவிடம் சென்று கூறு எனக்கு பயம் இல்லை; பெண்ணை திட்டிய அதிகாரி!
நாடளாவிய ரீதியில் மறுத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடு வரும் நிலையில், அநுரவிடம் சென்று கூறு எனக்கு பயம் இல்லை மருத்துவர் ஒருவர் பெண்ணை திட்டும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்க உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மக்கள் சேவகர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், பெண் ஒருவரை அரச அதிகாரி ஒருவர் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ள சம்பவம் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனக்கு அநுரவைப் பார்த்தால் பயம் இல்லை
குறித்த பெண் மருத்துவரிடம் தனது தேவை கருத்தி வினவியபோதே , வானில் இருந்த அந்த மருத்து அதிகாரி மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது "போய் அநுரவிடம் (ஜனாதிபதி) சொல்லு.. எனக்கு அநுரவைப் பார்த்தால் பயம் இல்லை" என அவர் ஆவேசமாகக் கத்தியுள்ளார்.
நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும், அடிமட்டத்திலுள்ள சில அதிகாரிகளின் மனோபாவம் மாறவில்லை என்பதையே இச்சம்பவம் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள், தங்களை நாடி வரும் சாதாரண மக்களைக் கௌரவமாக நடத்த வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறான அதிகாரிகளின் அநாகரிகச் செயற்பாடுகள் குறித்து உரிய தரப்பினர் உடனடியாகக் கவனம் செலுத்தி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனப் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.