நான் கையூட்டுப் பெற்றேனா; சபையில் சாணக்கியனை விளாசிய அமைச்சர் சந்திரசேகர்!
தம்மீது நாடாளுமன்றில் பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கையூட்டு பெறுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுமத்திரனுக்கு வக்காலத்து....
இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில், முக்கியமாக நான் இந்த சாணக்கியன் எம்பிக்கு (MP) சொல்ல வேண்டும். இன்று வடக்கை எடுத்துக்கொண்டால், சாணக்கியன் எம்பி பற்றியும், அவருக்குப் பிறகு அவரது குருவான சுமந்திரனுக்கு எதிராகவும் அதிகமாகப் பேசுவது நான்தான்.
அந்தத் கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம். அப்படி குற்றச்சாட்டுகள் இருந்தால் தயவுசெய்து அவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள், இல்லையென்றால் சி.ஐ.டி-யிடம் (CID) சென்று ஒப்படையுங்கள்.
ஒப்படைத்துவிட்டு அந்த வேலையைச் செய்யுங்கள். நான் கையூட்டுப் பெற்றேனா இல்லையா என்பது உங்களுக்கும் தெரியும்.
ஆனால், உங்களுக்கு எதிராக இப்போது இந்த நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் பேசுவது நான் மட்டும்தானே. எனவே, அந்தத் கோபத்தை வைத்துக்கொண்டு இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம். தயவுசெய்து அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.