கொழும்பில் நீடிக்கும் பதற்றம்... கூடாரங்களை இரவோடு இரவாக அடித்து நொறுக்கிய இராணுவம்!
கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) அரசாங்கத்தை பதவி விலக கோரி காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம போராட்டக்களத்தில், இருந்த கூடாரங்களை இரவோடு இரவாக இராணுவத்தினர் அடித்து நொருக்கியுள்ளதுடன் இளைஞர்களையும் விரட்டியடித்துள்ளனர்.
இதனால் தற்போது அந்த பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
கோட்டாபயவை பதவியில் இருந்து விலகக்கோரி 100 நாட்களை கடந்து தொடர்சியாக இடம்பெற்ற மக்கள் எழுச்சி போராட்டமானது கடந்த 9 ஆம் திகதி தீவிரமடைந்திருந்தது.
Military and Police are forcibly removing tents according to GalleFace protesters
— NewsWire ?? (@NewsWireLK) July 21, 2022
? Aragalaya FM pic.twitter.com/4JVdO4sYq2
இந்த நிலையில் அன்றைய தினம் ஜனாதிபதி மாளிகை ஜனாதிபதி செயலகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பெற்றப்பட்டன.
இதில் ஜனாதிபதி மாளிகையை மீண்டும் அதிகாரிகளிடம் ஒப்படைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை விட்டு இன்று வெள்ளிக்கிழமை வெளியேறுவதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அங்கிருந்த இளைஞர்களை வலுக்கட்டாயமாக விரட்டியதுடன் கூடாரங்களை அடித்து நொருக்கியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை குறித்த செயலகத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர் என இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த “கோட்டா கோ கம “ போராட்டக்களம் தற்போது “ரணில் கோ கம” என மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது