உலக சந்தை தாக்கம் ; இலங்கையில் தங்க விலையில் திடீர் ஏற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (18) திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தை நிலவரங்களுக்கு அமைய உள்நாட்டுச் சந்தையிலும் இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.