யாழ் போதனா வைத்தியசாலையில் கையை இழந்த சிறுமி; தாதி தொடர்பில் வெளியான தகவல்
மருத்துவத் தவறினால் யாழ். போதனா வைத்தியசாலையில், 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிறுமியின் கை போக காரணமான தாதி தொடர்பிலான தகவல்கள் சமூகவலைத்தளங்களில், வெளியாகியுள்ளது.
சிறுவர் வார்ட்டில் பணியாற்றி வரும் ஜனனி ரமேஸ் எனும் தாதியே சிறுமியின் இந்த அவலநிலைக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
தாதியால் மன உளைச்சலுக்கு ஆளாகும் குழந்தைகள் பெற்றோர்கள்
அதுமட்டுமல்லாது குறித்த தாதி மீது பல்வேறு குற்றசாட்டுக்கள் உள்ளபோது நிர்வாகம் அதனை கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளுக்கு தாயான அந்த தாதியால் , சிறுவார்ட்டில் உள்ள பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளும் பல முறை மன உளைச்சலுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை சம்பந்தப்பட்ட தாதி தொடர்பில் வைத்தியசாலை எவ்வித தகவல்களையும் வெளியிடாத நிலையில் சமூக வலைத்தளங்களில் தாதியின் செயலுக்கு கண்டணங்கள் குவிந்து வருகின்றது.
காச்சலுக்கு சிகிற்சைக்கு சென்ற சிறுமி கையை இழந்து தவிக்கும் நிலையில் அந்த சிறுமி போல , வேறு எந்த சிறுவர்களும் இதுபோன்ற பாதிப்புக்களுக்கு இனியேனும் முகம்கொடுக்க கூடாது என வலியுறுத்தியுள்ள சமூக ஆர்வலர்கள், சம்பவத்திற்கு காரணமான தாதி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு மருந்தினை ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக சிறுமி தனது கையை இழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.