சிறுமி மீது 20 முறை கோடாரியால் தாக்குதல் ; இரத்த வெள்ளத்தில் கழுத்தில் கயிறை கட்டி மேற்கூரையில் தொங்க விட்ட காதலன்
மத்திய பிரரேசத்தில் காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியை 20 முறை கோடாரியால் தாக்கிய சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சந்தாவ்னி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்து வந்துள்ளார்.

தீவிர சிகிச்சை
ஆனால், அவரின் காதலை ஏற்க சிறுமி மறுத்துள்ளார். இந்த சூழலில் 17 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, இளைஞர் கோடாரியுடன் அங்கு சென்றுள்ளதுடன் கோடாரியால் ஆவேசமாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சிறுமி நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிறுமியை தரதரவென மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கு, சிறுமியின் கழுத்தில் கயிறை கட்டி மாடி மேற்கூரையில் இருந்து தொங்க விட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த இளைஞனின் வாழ்வை மாற்றிய சம்பவம் ; சகோதரர்களின் மரணத்தால் தவிக்கும் குடும்பம்
அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவைரை விட்டுவிடும்படி கூச்சல் போட்டு கெஞ்சியுள்ளனர். திடீரென இளைஞரின் கையில் இருந்த கயிறின் பிடி நழுவியதால் சிறுமி கீழே விழுந்தார்.
உடனே அங்கிருந்து இளைஞர் தப்பியோடியதும் அருகில் இருந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கோடாரியால் 20 முறை தாக்கியதில் சிறுமியின் தலை, முகம் உள்ளிட்ட பகுதியில் படுகாயமடைந்ததால் 60 தையல்கள் போடப்பட்டுள்ளன.
தமிழர் பகுதியில் தாயை பாதுகாக்க சென்று உயிரை துறந்த இளைஞன் ; உறவினர்களால் இரவில் நடத்தப்பட்ட கொடூரம்
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியை 20 முறை கோடாரியால் தாக்கி, கழுத்தில் கயிறை கட்டி மாடியில் இருந்து தொங்கவிட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் பகுதியில் தாயை பாதுகாக்க சென்று உயிரை துறந்த இளைஞன் ; உறவினர்களால் இரவில் நடத்தப்பட்ட கொடூரம்
வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த இளைஞனின் வாழ்வை மாற்றிய சம்பவம் ; சகோதரர்களின் மரணத்தால் தவிக்கும் குடும்பம்
யாழ். விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தமிழ் அமைச்சர் எதிர்ப்பு; நாக விகாரைக்குள் ஒளிக்கப்பட்ட சிலை ; பகீர் தகவல்