நீராடச் சென்றபோது காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!
கினிகத்தேன - அபாடின் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கினிகத்தேன அபாடின் நீர்வீழ்ச்சிக்கு அருகில் வசித்து வந்த 34 வயதுடைய நுவன் சேரண பிரேமச்சந்திர என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் அபேர்டீன் நீர்வீழ்ச்சியைக் காண்பிப்பதற்காக தனது வீட்டிற்கு வந்த உறவினர்கள் குழுவை அழைத்துள்ளார்.
உறவினர்கள் நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அந்த இளைஞன் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் குதித்து, நீந்திக் கொண்டிருந்தபோது, அபாடின் நீர்வீழ்ச்சியில் காணாமல் போனார் என்று தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கினிகத்தேன பொலிஸார் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.