தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் விவகாரம் பெரும் குழப்பத்தில்; கடும் வாதப் பிரதிவாதம்!
திருகோணமலையில் இன்று (2024.01.27) காலை இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்தக் கூட்டத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கே பல குழப்பங்கள் நிலவிய நிலையில் புதிய பதவிகள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன.
பொதுச் செயலாளர் குகதாசன், சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே சிவஞானம், இணை பொருளாளர்கள் ஞா.சிறிநேசன், கனகசபாபதி, துணைத் தலைவர்கள் தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், அரியநேந்திரன், சத்தியலிங்கம், இணை செயலாளர்கள் சாந்தி சிறிஸ் கந்தராஜா, ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.