பலரையும் வியக்க வைத்த ஜனாதிபதி அநுர குமார ; ஆரம்பமான அநுரவின் அதிரடி
தற்போதைய அரசியல் களத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் அதிகம் பேசுபொருளாகி வருகின்றன.
இந்நிலையில் ஜனாதிபதி அநுர குமார எளிமையான முறையில் சாமான்யனாக தலதா மாளிகையில் 2026 புத்தாண்டு வழிபாடுகளை மேற்கொண்டமை அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
அத்துடன் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதிய விசாரணை ஆணைக்குழுவை நியமித்துள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய நகர்வுகள்
கடந்த காலங்களில் ஜனாதிபதிகள் வெளியில் செல்லும் போது பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்த நிலையிலேயே காணப்படும் வெளியாட்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டிருக்கும் எனினும் நேற்றைய தினம் ஜனாதிபதி புத்தாண்டு வழிபாடுகளை மேற்கொள்ளும் போது பொதுமக்களும் சாதாரணமாக வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மக்களோடு மக்களாக சாமான்யனாக ஜனாதிபதியும் வழிபாடுகளில் ஈடுபட்டமை பலரையும் கவர்ந்துள்ளது.
வழிபாடுகளின் பின்னர் மக்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.
2026ஆம் ஆண்டில் முக்கிய பல நகர்வுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அநுரவின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. அத்துடன் கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளித்த எதிர்கட்சி உறுப்பினர் தொடர்பிலும் அதிகம் பேசப்படுகின்றது.
இவ்வாறு நாட்டின் பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி ..