மட்டக்களப்பில் 21 வயது இளைஞனுக்கு நடந்தது என்ன! சடலத்தால் பரபரப்பு
மட்டக்களப்பு, அரசடியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகுந்தன் சந்தோஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கொழும்பிலிருந்து வருகை தந்த இளைஞன்
கொழும்பிலிருந்து வருகை தந்து, அக்கரைப்பற்றுக்குச் செல்லவிருந்த நிலையிலேயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நேற்று (01) இரவு 11:00 மணி வரை தங்களுடன் தொடர்பில் இருந்தவர், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரும், தடயவியல் பிரிவு பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.